| 245 |
: |
_ _ |a ஆபத்சகாயேஸ்வரர் கோயில் - |
| 246 |
: |
_ _ |a திருப்பழனம், கதலிவனம், கெளசிகாஷ்ரமம், பிரயாணபுரி, பழனிப்பதி |
| 520 |
: |
_ _ |a தேவாரப் பாடல் பெற்ற காவிரி வடகரைத் தலங்களில் இத்தலம் 50 வது தலம் ஆகும். திருஞானசம்பந்தர், அப்பர் இத்தலத்தைப் பாடியுள்ளனர். திருப்பழனம் பழம்பெரும் பதி. ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில் முதலாம் ஆதித்த சோழன் மற்றும் அவர் மகன் முதலாம் பராந்தகச் சோழ மன்னராலும் கட்டப்பட்டது. திருவையாற்றைச் சுற்றி அமைந்துள்ள ஏழு தலங்களில் (சப்தஸ்தான தலங்கள்) ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் இரண்டாவதாக அமைந்துள்ளது. |
| 653 |
: |
_ _ |a கோயில், சைவம், திருப்பழனம், ஆபத்சகாயநாதர், ஆபத்சகாயேசுவரர், பெரியநாயகி, சிவன் கோயில், தஞ்சாவூர், முற்காலச் சோழர், சோழர் கலைப்பாணி, தேவாரத் திருத்தலம், பாடல் பெற்ற தலம் |
| 700 |
: |
_ _ |a American Institute of Indian Studies, க.த.காந்திராஜன் |
| 710 |
: |
_ _ |a American Institute of Indian Studies |
| 905 |
: |
_ _ |a கி.பி.8-9-ஆம் நூற்றாண்டு / முத்தரையர்கள் |
| 909 |
: |
_ _ |a 1 |
| 910 |
: |
_ _ |a 1300 ஆண்டுகள் பழமையானது. தேவாரப் பாடல் பெற்ற திருத்தலம். |
| 914 |
: |
_ _ |a 10.88847884 |
| 915 |
: |
_ _ |a 79.13035523 |
| 916 |
: |
_ _ |a ஆபத்சகாயநாதர் |
| 917 |
: |
_ _ |a ஆபத்சகாயர், பழனப்பிரான், பரமேசுவரன், அமுதலிங்கேசுவரர் |
| 918 |
: |
_ _ |a பெரிய நாயகி, சிவசுந்தர கல்யாணி அம்மை |
| 922 |
: |
_ _ |a கதலி (வாழை), வில்வம் |
| 923 |
: |
_ _ |a மங்கள தீர்த்தம் , காவிரி தீர்த்தம், அமுத தீர்த்தம், முனிகுப்பம் தீர்த்தம், தேவதீர்த்தம் |
| 925 |
: |
_ _ |a இரண்டு கால பூஜை. |
| 926 |
: |
_ _ |a சப்தஸ்தான விழா, மார்கழி திருவாதிரை, ஐப்பசி அன்னாபிஷேகம் |
| 929 |
: |
_ _ |a விமானத்தின் கருவறைக் கோட்டங்களில் அமைந்துள்ள மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி, தெற்கே வீணாதர தட்சிணாமூர்த்தி, மேற்கில் அண்ணாமலையார், வடக்கே நான்முகன் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கின்றனர். அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கை கூப்பிய நிலையில், உடைவாளுடன் காட்சியளிக்கிறார். இறைவனின் திருமுன் சுற்றில் வேணுகோபாலர் குழலுடன் காட்சியளிக்கிறார். நேரே மூலவர் ஆபத்சகாயேசுவரர் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். ஆபத்சகாயர் சன்னிதிக்கு சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் சுந்தர நாயகி நின்ற திருக்கோலத்தில் உள்ளார். அம்மை வெளித் திருச்சுற்றில் ஈசனுக்கு இடப்பக்கமாக தனிக்கோவிலில் அருள்பாலிக்கிறார். |
| 930 |
: |
_ _ |a கௌதம நதி தீர்த்தத்தில் இருந்து சுசரிதன் என்ற அந்தணச் சிறுவன் பெற்றோரை இழந்து அமைதி நாடி தல யாத்திரையாக வந்தான். அச்சிறுவன் திருப்பழனத்தில் ஒரு இரவு தங்கினான். அன்று கனவில் எமதர்மன் தோன்றி, “இன்று முதல் ஐந்தாம் நாள் நீ மரணம் அடைவாய்” எனக் கூறி மறைந்தான். இதனைக் கேட்ட சிறுவன் பயம் கொண்டு திருப்பழனத்து இறைவனை சரணடைந்தான். சிவபெருமான் அசரீரியாக “நீ திருவையாற்றுக்குச் சென்றால் உயிர் பிழைத்துக்கொள்வாய்” என்று அச்சிறுவனுக்கு ஏற்ப்பட்ட ஆபத்திற்கு உதவி செய்ததார். எனவே இத்தல இறைவன் ஆபத்சகாயர் என அழைக்கப்பட்டார் என்பது புராண வரலாறு ஆகும். தல புராணத்தில் இத்தலத்து இறைவனை இலக்குமி வணங்கி வரம் பல பெற்றுத் தன் இருப்பிடம் புறப்பட்டதால் இத்தலத்திற்குப் பிரயாணபுரி என்றும், இறைவனுக்கு பிரயாணபுரீசர் என்றும் பெயராயிற்று எனக் கூறப்படுகிறது. இத்தலம் பாற்கடலைக் கடைந்த போது கிடைத்த அமுதத்தில் கெளசிகர் பங்கைப் பத்திரமாக ஒரு பாத்திரத்தில் மூடி வைத்திருந்ததாகவும், இதனை அறிந்து கொள்ளையடிக்க வந்த அசுரர்கள், இத்தலத்து இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட ஐயனார், காளி மூலம் அழிக்கப்பட்டதாகவும், பின்பு கௌசிகர் அமுதத்தைக் கொண்டு சிவலிங்கத்தை நிறுவி வழிபாடு செய்தார் என்பதுவும் ஒரு தொன்மக் கதை. |
| 932 |
: |
_ _ |a இக்கோயில் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அமைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் திருமுன்கள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சிற்றாலயங்களும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன. |
| 933 |
: |
_ _ |a இந்துசமய அறநிலையத்துறை |
| 934 |
: |
_ _ |a மேலைத் திருக்காட்டுப்பள்ளி, செந்தலை, திருவையாறு |
| 935 |
: |
_ _ |a திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது. |
| 936 |
: |
_ _ |a காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.00 மணி வரை. |
| 937 |
: |
_ _ |a திருப்பழனம் |
| 938 |
: |
_ _ |a திருவையாறு |
| 939 |
: |
_ _ |a திருச்சி |
| 940 |
: |
_ _ |a திருவையாறு விடுதிகள் |
| 995 |
: |
_ _ |a TVA_TEM_000161 |
| barcode |
: |
TVA_TEM_000161 |
| book category |
: |
சைவம் |
| cover images TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0009.jpg |
: |
|
| Primary File |
: |
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0001.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0002.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0003.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0004.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0005.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0006.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0007.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0008.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0009.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0010.jpg
TVA_TEM_000161/TVA_TEM_000161_திருப்பழனம்_ஆபத்சகாயேசுவரர்-கோயில்-0011.jpg
|